×

பிளேஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா டெல்லி? இரவு 7.30க்கு பெங்களூரு-ஐதராபாத் பலப்பரீட்சை

துபாய்: ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இன்று 2 போட்டிகள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு துபாயில் டெல்லி-மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன.  மும்பை 12 போட்டிகளில் 8 வெற்றி
களுடன் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று விட்ட நிலையில், பும்ரா, போல்ட் உள்ளிட்டவர்களுக்கு ஓய்வு அளித்து புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. மறுபுறம் டெல்லி இன்று வெற்றி பெற்று பிளேஆப் வாய்ப்பை இறுதி செய்யும் முனைப்பில் களம் இறங்கும். அந்த அணி 12 போட்டிகளில் 7 வெற்றியுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கடைசியாக ஆடிய 3 ஆட்டத்திலும் தோற்றுள்ளது.

இன்று வெற்றிபாதைக்கு திரும்ப முயற்சிக்கும். இரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 13ல் மும்பை, 12ல் டெல்லி வென்றுள்ளது. கடந்த அக்.11ல் மோதிய ஆட்டத்தில், மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதற்கு பழிதீர்க்க வேண்டிய நெருக்கடியும் டெல்லிக்கு உள்ளது. இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு 12 போட்டியில் 7ல் வென்றுள்ளது. இன்று வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யலாம். மறுபுறம் ஐதராபாத் 12 ஆட்டத்தில் 5ல் வென்றுள்ளது. இன்று வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது.

கடைசி போட்டியில் டெல்லிக்கு எதிராக 219 ரன்களை குவித்து 88 ரன் வித்தியாசத்தில் வென்றது. இன்றும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெல்ல முயலும். இதுவரை இரு அணிகளும் 15 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் தலா 7 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. நடப்பு சீசனில் கடந்த செப்.21ம்தேதி மோதிய ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வென்றுள்ளது. அதற்கு ஐதராபாத் பழிதீர்க்குமா என்று பார்ப்போம்.Tags : Delhi ,Bangalore ,Hyderabad ,multi-examination , Will Delhi ensure playoff chances? Bangalore-Hyderabad multi-examination at 7.30 pm
× RELATED அமித்ஷா டெல்லி திரும்பினார்