தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது...!! காவிரி மருத்துவமனை அறிக்கை

சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணுக்கு கடந்த 13-ந் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அமைச்சர் துரைகண்ணுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரலில் தொற்று அதிகரித்ததால் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்தது.

கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது அவரது நுரையீரலில் 90 சதவீதம் தொற்று ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். இருப்பினும் அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதுமில்லை என்று மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்திருந்தனா். மருத்துவக் குழுவினா் அவரை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகளுடன் அமைச்சர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: