×

உருளைக்கிழங்கின் மாத சராசரி விலை கிலோ ரூ.40-ஆக உயர்வு.: கடந்த 130 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை அதிகரிப்பு

சென்னை: வெங்காய விலை ஏற்றத்தை தொடர்ந்து கடந்த 130  மாதங்களில், அதாவது 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உருளைக்கிழங்கின் மாத சராசரி விலை கிலோ ரூ.40-ஆக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் இந்த மாத உருளைக்கிழங்கின் விலை ரூ.39.30 காசுகளாக உள்ளது. டெல்லியில்  உருளைக்கிழங்கின் மாத சராசரி விலை சற்று உயர்ந்து கிலோ ரூ.40.11 காசுகளாக உள்ளது. கடந்த அண்டை ஒப்பிடுகையில் டெல்லியில் உருளைக்கிழங்கின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தின் உருளைக்கிழங்கின் சராசரி விலை ரூ.25-ஆக இருந்தது. இது தற்போது 60% அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு இருப்பு குறைந்ததே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. குளிரூட்டப்பட்ட கிடங்குகளில் உருளைக்கிழங்கு 36.50 கிலோ கோடி பைகள் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதுவே 2018-ம் ஆண்டு 57.50 கிலோ கோடி பைகளிலும், கடந்த ஆண்டு 48.50 கிலோ கோடி பைகளிலும் உருளைக்கிழங்கு இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டால் வரும் நாட்களில் உருளைக்கிழங்கின் விலை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 


Tags : Monthly average price of potatoes rises to Rs. 40 per kg: Unprecedented in last 130 months
× RELATED சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து