×

கழுத்து அறுபட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஆம்புலன்சை வழிமறித்த வாலிபர்: வேளாங்கண்ணியில் பரபரப்பு

நாகை: வேளாங்கண்ணியில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் சொட்ட, சொட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து ஏறிய வாலிபரால் பரபரப்பு  ஏற்பட்டது.நாகை மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி சாலையில் நேற்று வாலிபர் ஒருவர் கழுத்து அறுப்பட்டு உடலில் ரத்தம் சொட்ட, சொட்ட அவ்வழியே  வந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தினார். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மகேந்திரன் (25) கழுத்து அறுப்பட்ட வாலிபரை ஆம்புலன்சில் ஏற்றி  நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். மயங்கிய நிலையில் இருந்த வாலிபர் யார் என்று தெரியாத நிலையில் முதலுதவிக்கு பின்  திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

 தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று விசாரணை நடத்தினார். இதில் கழுத்து அறுப்பட்ட வாலிபர் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ரங்கராஜன் மகன் மகேந்திரன் (20) என்பதும்  திருப்பூரில் வேலை பார்த்து வந்தவர். இவர் சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர். வீடு  திரும்பாதது தெரியவந்தது. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து,வாலிபர் தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டாரா? அல்லது யாரேனும் தாக்கியதில் கழுத்து அறுக்கப்பட்டதா? என்று  அப்பகுதியில் உள்ள லாட்ஜிகளில் உள்ள சிசிடிவி.,கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Velankanni , A youth who cut his neck and diverted an ambulance dripping blood: a commotion in Velankanni
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது