×

சரக்கு ரயில் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து குமரிக்கு 1000 டன் சீனி வருகை

நாகர்கோவில்:  கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என மத்திய  அரசு அறிவித்தது. கூடுதல் அரிசி ஆந்திரா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் குமரிக்கு கொண்டுவரப்படுகிறது.  மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, கோதுமை, சீனி உள்ளிட்ட பொருட்களும் ரயில் மூலம் குமரிக்கு வந்துகொண்டு இருக்கிறது.

நேற்று  மகாராஷ்டிராவில் இருந்து குமரிக்கு சரக்கு ரயில் மூலம் சீனி கொண்டுவரப்பட்டது. நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்த சரக்கு  ரயிலில் 1000 டன் சீனி இருந்தது. மொத்தம் 18 வேகனில் இருந்த சீனி மூட்டைகள் லாரிகள் மூலம் இறக்கப்பட்டு பள்ளிவிளை மத்திய அரசின்  குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஒதுக்கீடு அடிப்படையில் நுகர்பொருள் வாணிபகழக குடோனுக்கு அனுப்பி  வைக்கப்படவுள்ளது.

Tags : Kumari ,Maharashtra , 1000 tons of sugar arriving in Kumari from Maharashtra by freight train
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...