கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இன்குபேஷன் சென்டர் துவக்கம்

திருக்கழுக்குன்றம்:  கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இயங்கும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில் இன்குபேஷன் சென்டர் எனப்படும் “அடைகாக்கும் மையத்தை” அணுசக்தி துறை தலைவர் கே.என்.வியாஸ் மும்பையில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்த விழா, கல்பாக்கம் அடுத்த அணுபுரத்தில் நேற்று நடந்தது. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் அருண்குமார் பாதூரி தலைமை தாங்கினார். அணுமின் நிலைய அதிகாரிகள் வெங்கட்ராமன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் இன்குபேஷன் சென்டர் எனப்படும் அடைகாக்கும் மையம் மூலம் சுற்றுப்புற சூழல் மாசு, சுற்றுப்புறத்தில் எங்கெல்லாம் எவ்வளவு கதிர்வீச்சு உள்ளது, பெண்களின் மார்பக புற்றுநோய் உள்பட புற்றுநோய் வகைகளை எளிதாக ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், விவசாயம் சம்பந்தமான மற்றும் பயிர் பாதுகாப்பு ஆகியவை பற்றி கண்டறியலாம். இந்த செயல்பாடுகளுக்காக  4 நிறுவனங்களிடம் இருந்து  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடைகாக்கும் மையத்தால் வரும் காலங்களில் பல்வேறு பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: