திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பொன்னையா பொறுப்பேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் இடம் மாற்றம் செய்தும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும் இடம் மாற்றும் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பா.பொன்னையா கலெக்டர் அலுவலகத்தில் முறைப்படி கையெழுத்திட்டு பொறுப்பேற்றார். முன்னதாக அவர் திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில்  சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வே.முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.லோகநாயகி, திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Related Stories:

>