உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா...!! பாதிப்பு எண்ணிக்கை 4.58 கோடியாக உயர்வு; 11.93 லட்சம் பேர் உயிரிழப்பு

வுகான்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.58 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.32 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 11.46 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்;

* ஸ்பெயின் -12,64,517

* அர்ஜென்டினா - 11,57,179

* கொலம்பியா - 10,63,151

* இங்கிலாந்து - 9,89,745

* மெக்சிகோ - 9,12,811

* பெரு - 9,00,180

* தென்னாப்பிரிக்கா - 7,23,682

* இத்தாலி - 6,47,674

* ஈரான்- 6,04,952

* ஜெர்மனி - 5,17,720

Related Stories: