புயல், நிலச்சரிவு: வியட்நாமில் 35 பேர் பலி: 50 பேர் மாயம்

ஹனோய்: வியட்நாமில், ‘மொலாவே’ புயல், நிலச்சரிவால் 35 பேர் பலியாகி உள்ளனர். வியட்நாமில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அங்கு குவாங்நாம் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்களில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும், மொலாவே புயல் காரணமாக பல்வேறு இடங்களில் 16 பேர் பலியாகி உள்ளனர்.

இவர்களில் 12 பேர் மீனவர்கள். அதேபோல், பின் டின் மாகாணத்தில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 26 மீனவர்களில் 12 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். 14 பேரை காணவில்லை. குவாங்நாகி மாகாணத்தில் 56,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. குவாங்நாம், கியா லாய் மாகாணங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததிலும் மரங்கள் வேரோடு சாய்ந்ததிலும் 4 பேர் பலியாகினர்.  

Related Stories: