துருக்கியில் பயங்கர பூகம்பம்: 4 பேர் பலி; 120 பேர் காயம்

இஸ்தான்புல்: துருக்கியில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் 4 பேர் பலியாகினர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் நேற்று சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவானது. இதனால், துருக்கி நாட்டின் மேற்கு பகுதிகள் பயங்கரமாக குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. குறிப்பாக, இஸ்மிர் நகரில் கட்டிடங்கள் குலுங்கி, இடிந்து விழுந்தன. இவற்றில் சிக்கி 4 பேர் பலியாகினர். 120க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள பலரை மீட்க, மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

பூகம்பத்தின்போது கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள், தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இரவு முழுவதும் அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். இந்த பூகம்பத்தால் சமோஸ் தீவில்  சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டு கடல் அலைகள்  நகருக்குள் புகுந்ததாக கிரீஸ்  நாட்டு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. இஸ்மிர் மாகாணத்தில்  மீட்பு படைகள் விரைந்துள்ளன. 35 மருத்துவக் குழுக்களும் விரைந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் சடலங்கள் கிடைக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories: