×

கணபதிபாளையம் செல்லும் வழியில் பயன்பாடின்றி கிடக்கும் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி

கரூர்: கரூர் தாந்தோணிமலை கணபதிபாளையம் செல்லும் வழியில் பயனற்ற நிலையில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு கரூர் நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தரப்பட்டது. ஒரு சில மாதங்களுக்கு பிறகு மோட்டார் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான டேங்க்குகள் தற்போதைய நிலையில் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.

இதே போல் தாந்தோணிமலை கணபதிபாளையம் செல்லும் சாலையிலும் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தரப்பட்டது. ஆனால், தற்போது பயன்பாடின்றி உள்ளது. இதனால் உபரி தண்ணீர் பயன்பாடு கிடைக்காமல் பகுதியினர் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த டேங்கினை பராமரித்து திரும்பவும் செயல்படுத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Syntex ,Ganapathipalayam , Unused Syntex drinking trough on the way to Ganapathipalayam
× RELATED கணபதிபாளையம் செல்லும் வழியில்...