×

ஓட்டுனர், நடத்துனர்கள் தவறாது வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும் : போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்

அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களும் தவறாது வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டிருக்க வேண்டும் போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கூறுகையில், ‘அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களும் தவறாது சுழற்சி முறையில் பணிக்கு ஆஜராகி வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டிருக்க வேண்டும். 100 சதவீதத்துக்கு குறைவாக கிளைகளில் பேருந்துகள் இயக்கப்படும் பொழுது பணி கிடைக்காத ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் அன்றைய தினமே டூட்டி சார்ட்டில் தவறாது கையொப்பமிட்டு பணிமனைகளில் தயாராக இருக்க வேண்டும்.
 
டூட்டி சார்ட்டில் கையொப்பம் இட்டு பேருந்து பணி கிடைக்காதவர்களுக்கு அடுத்த நாட்களில் பேருந்தில் பணிபுரிய முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் தவிர்க்க முடியாத காரணங்களினால் பணிக்கு வர இயலாமல் இருந்தால் முன்கட்டியே தகவல் தெரிவித்து, முறையாக விடுப்பு அனுமதி பெற வேண்டும். தவறும்பட்சத்தில் ஆப்சென்ட்டாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.

கிளைக்கு முறையாக உரிய நேரத்தில் பணிக்கு வந்து கிளையில் இருந்தும், பணி கிடைக்காத பட்சத்தில் டூட்டி சார்ட்டில் கையொப்பம் இட கண்டிப்பாக அனுமதி வழங்கி நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும்படத்தில் சம்பந்தப்பட்ட டிராபிக் கிளார்க் மற்றும் கிளை மேலாளர்களே பொறுப்பாவார்கள் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Drivers ,conductors ,
× RELATED பணிநிரந்தரம் செய்வதாக கூறி அதிமுக...