×

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்

நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் இன்று திருமணம் நடைபெறுகிறது.தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்தவர் காஜல்அகர்வால். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணத்துக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த மாதம் இவர்களுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் மும்பையில் காஜலின் வீட்டிலேயே இவர்களின் திருமணம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் இரு குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Tags : Kajal Agarwal ,
× RELATED அக்டோபர் 30ம் தேதி மும்பையில் எனக்கு...