×

ஆளுநர் பாஜக-வின் ‘ஒலி பெருக்கி’ : திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சாடல்

கொல்கத்தா,:மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் அரசியல் ரீதியாகவும், சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாகவும் முட்டல் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆளுநர் ஜகதீப் தங்கர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, நேற்று டெல்லியில் சந்தித்து மாநில அரசு நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், ‘ஆளுநர் ஜகதீப் தங்கர் மாநிலத்தின் புகழை கெடுக்க முயற்சிக்கிறார். அவர் பாஜக-வின் செய்தித் தொடர்பாளர் போல பேசுகிறார்.

இவர் ஆளுநராக பதவியேற்றதிலிருந்து, அவருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக தகராறு இருந்து வருகிறது. பாஜக-வின் ஒலிபெருக்கியைப் போல், அவர்களின் கருத்துகளை அப்படியே பேசிவருகிறார். மேலும், அவர் ஆளுநர் மாளிகைக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார். பொய்களின் மூட்டையுடன் டெல்லிக்குச் சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்கிறாரா? அல்லது பாஜக தலைவர்களைச் சந்திக்க சென்றுள்ளாரா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags : Governor ,BJP ,Sadal ,Trinamool Congress ,
× RELATED கவர்னர் பன்வாரிலாலுடன் அண்ணாமலை சந்திப்பு