கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

ராய்ப்பூர், சட்டீஸ்கரில் கொரோனா தொற்றால் பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன.சட்டீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 1,81,583 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் காரணமாக இதுவரை 1,936 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், ராய்ப்பூரை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி பெண் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு நேற்று திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில், மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அந்த 3 குழந்தைகளும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது.

Related Stories:

>