ஆவின் பால் அட்டையை இனி ஆன்லைனில் பெறலாம்: விரைவில் அறிமுகமாகிறது

சென்னை: ஆவின் பால் அட்டையை ஆன்லைனில் பெறும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ‘ஆவின் பால் அட்டை விநியோகத்துக்கு கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வந்த கடுமையான ஆய்வு முறையை விடுத்து, நுகர்வோர் எளிமையான வகையில் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அண்மையில் ஆவின் தனது இணையதளத்தை மேம்படுத்தியது. தன்மூலம் பழைய அட்டைதாரர்களும், புதிதாக வாங்கியிருப்பவர்களும் பால் அட்டை தொடர்பான அனைத்து சேவைகளையும் இனி ஆன்லைனில் பெற முடியும்.

சுய விபரங்களை சேர்த்தல், இணைய வழியில் பணம் செலுத்துதல், ஆவணங்கள் பதிவேற்றம் உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். ஆவின் பால் அட்டை வைத்திருப்பவர்கள் சந்தை விலையை ஒப்பிடும் போது லிட்டருக்கு ரூ.6 வரை குறைவாக பெற முடியும். இதன்மூலம் அவர்கள் மாதம் ரூ.1,500 வரை சேமிக்க முடியும்’ என்றனர்.

Related Stories:

>