மறைந்த குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல்: குஜராத்தில் 2 நாட்கள் முகாம்

அகமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இன்று ஆறுதல் கூறினார். நாளை ஒற்றுமை சிலைக்கு மரியாதை செலுத்தி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அக். 31ம் தேதி நாடு முழுவதும் ‘ஏக்தா திவாஸ்’ அணிவகுப்பு நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள ‘ஒற்றுமை சிலை’க்கு (சர்தார் வல்லபாய் படேல்) அஞ்சலி செலுத்தப்படும். இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஏக்தா திவாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து 2 நாள் பயணமாக குஜராத் சென்றார்.  

தொடர்ந்து, உடல்நலக் குறைவால் இறந்த குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து  நர்மதா மாவட்டத்தின் கெவாடியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதேபோல், சர்தார் படேல் விலங்கியல் பூங்கா மற்றும் ஏக்தா  மால் திறப்பு நிகழ்ச்சி, கெவாடியா-அகமதாபாத்திற்கு இடையிலான கடல்சார் விமான சேவைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மோடி குஜராத் வந்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories:

>