திருவாரூர்: திருவாரூர் நகரில் சுற்றுலாத்துறை மூலம் சாலையோரங்களில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில், திருக்கண்ணமங்கை பெருமாள் கோயில், வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக சுற்றுலா தலங்கள் மற்றும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற இடங்களுக்கு செல்லும் வழி மற்றும் அந்தந்த பகுதிகளுக்கு எத்தனை கிலோ மீட்டர் தூரம் போன்ற விவரங்கள் குறித்து சுற்றுலாத்துறை மூலம் பெயர்பலகை அமைக்கப்பட்டு வருகிறது.