×

கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் விற்பனை விறுவிறுப்பு; வெளிமாநில வியாபாரிகள் குவிந்தனர்

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் குவிந்ததால் மாடுகள் விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடந்தது. வரத்தான மாடுகளில் 70 சதவீதம் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரை அருகில் வியாழன்தோறும் மாட்டு சந்தை நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டத்தில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
மாடுகளை வாங்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர்.

இதனால், சந்தையில் வரத்தான மாடுகளில், 70 சதவீதம் விற்பனையானது. இதுகுறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறுகையில்,`இந்த வாரம் கூடிய சந்தையில் 300 பசு, 100 எருமை, 60 கன்று என 460 மாடுகள் வரத்தானது. இதில், கறவை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையும், கன்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அடுத்த வாரம் மாடுகள் வரத்து இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’  என்றனர்.

Tags : Cattle sales boom ,Karungalpalayam ,merchants ,Outlandish , Cattle sales boom at Karungalpalayam market; Outlandish merchants flocked
× RELATED பறக்கும் படை அதிகாரிகளின்...