×

போச்சம்பள்ளியில் தென்னங்கன்று விற்பனை அமோகம்; வியாபாரிகள் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் பெய்து வரும் தொடர் மழையால், தென்னங்கன்று விற்பனை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் அளவில் விற்பனையாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, சந்தூர், அரசம்பட்டி, மங்கலப்பட்டி, பெண்ரஅள்ளி, வேலம்பட்டி, பண்ணந்தூர், பாரூர், மஞ்சமேடு உள்ளிட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட நர்சரி கார்டன்கள் உள்ளன. இங்கு ஜம்புநாவல், காட்டுநெல்லி, வீரிய ஒட்டுரக புளிய செடிகள், தென்னை, மா, நெல்லி, சப்போட்டா உள்ளிட்ட செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில், தென்னங்கன்று உற்பத்தியில் போச்சம்பள்ளி தாலுகா முக்கிய  இடம் வகிக்கிறது.

தமிழகத்தில் திண்டுகல், மதுரை, தேனி, பழனி, ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி, தென்காசி, பெரியகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் போச்சம்பள்ளி தாலுகாவிற்கு லாரி, டெம்போ மூலம் நேரடியாக வந்து தென்னங்கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர். தென்னங்கன்று உற்பத்தி மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். நல்ல வருவாய் கிடைப்பதால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் தடைபட்ட தென்னங்கன்று சாகுபடி தொழில் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. தற்போது தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், மழை பெய்து வருவதால் தென்னங்கன்றுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் தென்னங்கன்றுகள் விற்பனை மந்த நிலையில் காணப்பட்டது. ஒரு கன்று 30க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 70க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1 லட்சம் தென்னங்கன்றுகள் விற்பனையாகிறது என்றனர்.



Tags : Pochampally Merchants , Sales surge in the south at Pochampally; Merchants are happy
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை