7.5% உள்ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: நீதிமன்றம் சென்றால் அரசாணை இருக்குமா, இருக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது...மு.க.ஸ்டாலின் பேட்டி.!!!

ராமநாதபுரம்: 7.5% உள்ஒதுக்கீடு நீதிமன்றம் சென்றால் அரசாணை இருக்குமா, இருக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம்  அமைந்துள்ளது. இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியாக கொண்டாடப்படும். இதன்படி, பசும்பொன்னில் தேவர் இன்று 30-ம் தேதி முத்துராமலிங்க தேவரின் 58-வது குருபூஜை மற்றும் 113-வது  ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.  மு.க.ஸ்டாலினுடன் திருச்சிராப்பள்ளி மேற்கு திமுக சட்டமன்றத் தொகுதி கே. என். நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக தலைவர்மு.க.ஸ்டாலின், அரசு இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன். காலம் தாழ்த்தாமல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.  மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பே 7.5% உள்ஒதுக்கீடு அரசாணையை வெளியிட்டிருக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே மருத்துவபடிப்பில் இடம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மருத்துவ படிப்பு கலந்தாய்வை விரைவு படுத்தி அரசு மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்க செய்ய வேண்டும். சட்ட ரீதியாக அரசாணை செல்லுமா, செல்லாதா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீதிமன்றம் சென்றால்  அரசாணை இருக்குமா, இருக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் செய்வதாக கூறுகிறார் முதல்வர் பழனிசாமி, அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

Related Stories: