×

மயானத்திற்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவர் சடலத்தை வயலில் எடுத்து செல்லும் அவலம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே புதுதேவங்குடி ஊராட்சியில் மயானத்திற்கு சாலைவசதி இல்லாததால் இறந்தவர் சடலத்தை வயல் வழியே எடுத்துச் சென்றனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் புதுதேவங்குடி ஊராட்சியில் உள்ளது அக்ரஹார தெரு மற்றும் மேட்டுத்தெருவில் சுமார் 60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒருவர் உயிரிழந்தால் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல பாதை வசதி இல்லை. இதனால் சுமார் 100 ஆண்டு காலத்திற்கு மேலாக குளத்தில் உள்ளே இறங்கிதான் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு 2 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்கின்றனர்.

கோடை காலத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் சிரமம் தெரிவதில்லை. இந்நிலையில் மேட்டுத்தெரு அக்ரஹார தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் திடீரென உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இறுதி சடங்கிற்கு சடலத்தை எடுத்துச்செல்ல வழியின்றி நேற்று மக்கள் குளத்திலும், நடவு வயல்களிலும் இறங்கி நாற்றுகளை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் இறுதி சடங்கை கூட முறையாக செய்யமுடியாத சூழ்நிலை இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், மேட்டூர்அணை திறந்து தண்ணீர் வந்து விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மழைக் காலங்களிலும் இப்பகுதியில் யாரும் இறந்துவிட்டால் அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி அமைத்து தர வேண்டி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரையிலும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. குளத்தில் இறங்கிதான் கரையேற வேண்டியுள்ளது. 100 ஆண்டு காலமாக இதே நிலைமையை அனுபவித்து வரும் சிரமத்தை போக்கும் வகையில் அக்ரஹார தெரு மற்றும் மேட்டுத்தெருவிலிருந்து மயானத்திற்கு செல்ல சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : deceased ,field ,cemetery , It is a pity that the body of the deceased is taken to the field as there is no road facility to the cemetery
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது