×

ஆன்லைன் விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மனு

டெல்லி : நாடு முழுவதும் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், டெல்லி சஞ்சார் பவனில் இருக்கும் தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை செயலாளர் அனுசா பிரகாஷ்சிடம் நேற்று ஒரு மனு கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் கூறியதாவது, ஆன் லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சட்ட விரோதமான பல்வேறு விளையாட்டுகளுக்கு அரசு தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக தமிழ்நாட்டில் சூதாட்டமும், லாட்டரிச் சீட்டு விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனையும் மீறி செயல்படுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், சமீபகாலங்களில் ஆன்லைன் மூலம் ரம்மி உட்பட பல்வேறு விளையாட்டு ஒரு மோசமான போக்காக இருந்து வருகிறது.

மேலும் ரம்மி விளையாட வாங்க என விளையாட்டுப் பிரபலங்கள் பலரும் பகிரங்கமாக தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்கள். தடை செய்யப்பட்ட சூதாட்டம் ஆன்லைனில் கனஜோராக நடப்பதும், அதற்கு பிரபலங்கள் விளம்பரங்கள் கொடுப்பதும் சூதாட்டத் தடையைக் கேலி செய்வதாக உள்ளது. குறிப்பாக சமீபத்தில் புதுவை மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபர் ஆன் லைன் விளயாட்டில் ஏற்பட்ட இழப்பால் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அவரது குடும்பத்தின் எதிர்காலமே தற்போது கேள்விக்குறியாக உள்ளது. இதேநிலை தான் நாடு முழுவதும் உள்ளது. அதனால் ஆன் லைனில் விளையாடக்கூடிய ரம்பி உட்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளேன். இதுதொடர்பான உடனடியாக பரிசீலனை செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Congress ,Gem Tagore Petition , Online, Tamil Nadu, Congress, MP Gem Tagore, Petition
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்