தீபாவளிக்கு 5 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:  கொரோனா பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, நாடு முடக்க நடவடிக்கைகள், இதுவரை முற்றிலுமாக  விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடங்கிய நேரத்தில் தமிழ்நாடு அரசு சிறு நிதியுதவி செய்தது எனினும் தீபாவளி பண்டிகை செலவுகளுக்காக  உடனடியாக குடும்பத்திற்கு தலா 5000 வீதம் நிதியுதவி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அவர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ‘‘எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் தகுதியற்ற நபரை நீக்க  வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: