×

விமானத்தில் கடத்தி வந்த 6.88 கிலோ தங்கம் பறிமுதல்6 பேர் கைது

கோவை: ஷார்ஜாவில் இருந்து நேற்று கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமான பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் நாசர் (35) என்ற பயணி ஆசன வாயில் 2.1 கிலோ எடையிலான  தங்கத்தை துகள்களாக அரைத்து அதை இரண்டு பிளாஸ்டிக் கவரில் போட்டு ஆணுறைக்குள் வைத்து சொருகியிருந்தார். இதேபோல் தர்மராஜ் (40) என்பவர் 3 பாக்கெட்டில் 610 கிராம் தங்க துகள்களையும், சாகுல் அமீது (36) என்பவர் 943 கிராம்  தங்க துகள்களையும் பாக்கெட்டில் அடைத்து ஆசன வாயில் மறைத்து கடத்தி வந்துள்ளனர். இது தவிர யுவராஜ், பாட்ஷா, சாஜிப் ஆகியோர் தாங்கள் அணிந்து வந்த ஆடைகளில் தங்க துகள்களை பசை போல் அரைத்து வேதிப்பொருட்களுடன்  கலந்து ஒட்டி கடத்தி வந்தனர். இந்த 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள் இவர்களிடமிருந்து ரூ.3.6 கோடி மதிப்பிலான 6.88 கிலோ எடையிலான 24 காரட் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.


Tags : Six arrested for smuggling 6.88 kg of gold
× RELATED அகழாய்வு தேவையற்றது என்போரின் வயிறு...