கோவை தனியார் நிறுவனத்தில் போலி ரசீது மூலம் 9.7 கோடி மோசடி - உரிமையாளர் கைது: ஜி.எஸ்.டி அதிகாரிகள் நடவடிக்கை

கோவை: கோவை யில் போலி ரசீது மூலம் 9.7 கோடி மோசடி செய்த உரிமையாளர் கைதானார். கோவை ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் கோவிந்தராஜ் தலைமையிலான அதிகாரிகள் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தின் இன்வாய்ஸ் பில்,  வே பில் போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதில் பொருட்களை சப்ளை செய்யாமல் போலி ரசீது மற்றும் ஆவணங்கள் மூலமாக இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சம்பத்குமார் என்பவர் மோசடி செய்திருப்பதும், போலி ரசீதுகளை பயன்படுத்தி  9.7 கோடி ஜிஎஸ்டி வரிச்சலுகை பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவர் மீது முறைகேடு, மோசடி வழக்குகளை வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக சம்பத்குமார் கைது செய்யப்பட்டார். ‘‘போலி ரசீது,  ஆவணங்களை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்யக்கூடாது. அப்படி செய்யும் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜி.எஸ்.டி. செலுத்தி முறையாக தொழில், வணிகம், வர்த்தகம் செய்யவேண்டும்’’ என ஜி.எஸ்.டி. அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர்.

Related Stories: