மெத்தனால் லிட்டருக்கு 3.34 வரை உயர்வு

புதுடெல்லி:  நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. நாட்டின் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால், இறக்குமதியை குறைக்கும் வகையில், பெட்ரோலில் 10 சதவீதம் வரை எத்தனால் கலக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்காக, கரும்பு ஆலைகளில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

 இந்த சூழ்நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு நேற்று கூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கரும்புச்சாறில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் லிட்டருக்கு 59.48ல் இருந்து 62.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் டிசம்பர் 2020ல் இருந்து சப்ளை செய்யப்படும் எத்தனாலுக்கு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 இதுபோல், சி மொலாசசில் இருந்து பிரிக்கப்படும் எத்தனால் லிட்டருக்கு 43.75ல் இருந்து 45.69 ஆகவும், பி. எத்தனாலுக்கு 54.27ல் இருந்து 57.61 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Related Stories: