×

சொல்லிட்டாங்க...

ஒவ்வொரு பணிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கி அதை செலவிடாமலேயே, சுருட்டுவது எப்படி என்ற  ஊழல் கலையின் ஊற்றாக அதிமுக அரசு விளங்குகிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இருக்கிற கட்சிகள் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுத்து பாதுகாப்பு கவசமாக செயல்படுகின்றன.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை பாஜவும், அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளன.
- விசிக தலைவர் திருமாவளவன்

மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படாததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்



Tags : told
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...