×

தச்சநல்லூர் மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட நவீன சோலார் ரிப்ளக்டர்கள் மாயம்

நெல்லை; தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம், நெல்லை ஈரடுக்கு ேமம்பாலம், ஆற்றுப்பாலம் உள்ளிட்ட நெல்லை மாநகர சாலைகளின் ஓரத்தில் இரவு நேரங்களில் ஏற்படுகிற வாகன விபத்துகளை தடுப்பதற்காக, செவரான் ேபார்டு என்கிற நவீன சோலார் உதவியுடன் ஒளிரும் ரிப்ளக்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து இந்த ரிப்ளக்டர்களை சாலையோரங்களில் அமைத்துள்ளனர். இந்நிலையில் தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட ரிப்ளக்டர்களில் பல மாயமாகி உள்ளன. அவற்றில் சில சேதமடைந்து உள்ளன.

இதுபோல் டவுண்-சேரன்மகாதேவி சாலையில் உள்ள நெல்லை கால்வாய் பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த ரிப்ளக்டர்களும் மாயமாகி உள்ளன. வாகன ஓட்டிகளின் நலன் கருதி அமைக்கப்பட்ட இந்த ரிப்ளக்டர்களை திருடியவர்கள் அல்லது சேதப்படுத்தியவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.Tags : Dachanallur , The magic of modern solar reflectors set up on the Dachanallur flyover
× RELATED கொரோனா நோயாளிகள் செல்போன்கள் ‘ஆப்’ பெங்களூருவில் 3,000 பேர் மாயம்