×

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 70 சதவீதம் மாடுகள் விற்பனை

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் வரத்தான மாடுகளில் 70 சதவீதம் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரை அருகில் வியாழன்தோறும் மாட்டு சந்தை நடக்கிறது. அதன்படி இன்று நடந்த மாட்டு சந்தைக்கு, நேற்று இரவு முதலே ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டத்தில் இருந்து மாடுகள் வரத்துவங்கியது. மாடுகளை வாங்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா,  தெலங்கானா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால், சந்தையில் வரத்தான மாடுகளில், 70 சதவீதம் விற்பனையானது.

இது குறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறுகையில், இந்த வாரம் கூடிய சந்தையில் 300 பசு, 100 எருமை, 60 கன்று என 460 மாடுகள் வரத்தானது. இதில், கறவை மாடுகள் ரூ.30ஆயிரம் முதல் ரூ.65ஆயிரம் வரையும், கன்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அடுத்த வாரம் மாடுகள் வரத்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.

Tags : Erode Ebony Market , About 70% of the cows are sold at the Erode Blackstone Market
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...