கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷணனின் மகன் பினிஷ் கைது: தலைமை செயலகம் பகுதியில் போலீசார் குவிப்பு

திருவனந்தபுரம்: கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷணனின் மகன் பினிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு போதை மருந்து வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் பெங்களுருவில் நடிகைகள் மற்றும் இசை அமைப்பாளர்கள் பெருமளவு இந்த போதை பொருளை பயன்படுத்துவதாகவும்,  அதைப்போல மற்றவர்களுக்கு விற்பனையில் ஈடுபடுவதாகவும், எழுந்த புகாரை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ச்சியாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ச்சியாக அனிகாவுடன் நடத்திய விசாரணையை தொடர்ந்து 150-க்கும் அதிகமான நடிகை, நடிகர்களிடம் விசாரணை நடத்தினர். அதேபோல கேரளாவை சேர்ந்த முகமது அனிஷிடம் விசாரணை நடத்திய போது பெங்களுருவில் பல்வேறு ஹோட்டல்களில் போதை பொருட்கள் விற்பனை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. இந்நிலையில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷணனின் மகன் பினிஷ் கொடியேரி அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.

இதனை தொடர்ந்து எதிர்கட்சிங்க்ள் கேரளாவில் பல்வேறு போராட்டங்களை நடத்தின. கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை போதைப்பொருள் கூடாரமாக இருக்கிறது என்றும் அதேபோன்று தலைமை செயலகம் தங்கக்கடத்தல் கும்பலில் கூடாரமாக இருக்கிறது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். தொடர்ந்து பினிஷ் கொடியேரியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனியிடயே முகமது அனிஷிடம் நடத்திய விசாரணையில் பினிஷ் கொடியேரி தனக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறினார்.

அந்த 50 லட்சம் ரூபாய் எப்படி வந்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பினிஷ் கொடியேரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பினிஷ் கொடியேரி கைதை அடுத்து, கேரள தலைமை செயலகம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories:

>