×

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்: 7 கோடி வாக்குகள் பதிவாகி நூற்றாண்டு சாதனைக்கு அடித்தளம்..!!

வாஷிங்டன்: அமெரிக்க பொதுத்தேர்தல் வாக்குபதிவிற்கு முந்தைய தேர்தலில் 7 கோடி மக்கள் வாக்களித்து நூற்றாண்டு சாதனைக்கு வித்திட்டுள்ளனர். இதனிடையே பிரச்சார களமும் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க அதிபர் பொதுத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆளும் குடியரசுக்கட்சி சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் 77 வயதாகும் ஜோ பைடன் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். தேர்தல் நாளில் மக்கள் வாக்களிக்க இயலாமல் போவதை தவிர்க்கும் வகையில் வாக்குபதிவிற்கு முந்தைய தேர்தல் அங்கே நடைமுறையில் உள்ளன. கொரோனா கலாத்திற்கு சாதகமான இந்த முறையால் அனைத்து மாகாணங்களிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். முன்கூட்டிய வாக்குபதிவில் 7 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். கடந்த அதிபர் தேர்தலில் மொத்தம் 13 கோடியே 60 லட்சம் வாக்குகள் பதிவாகின. இந்த முறை முன்கூட்டிய வாக்குபதிவிலேயே பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்துள்ளனர். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 15 கோடி வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருத்துக்கணிப்புகளில் ஜோ பைடனுக்கு ஆதரவான அலை வீசி வருகிறது. தபால் வாக்குபதிவிற்கான கூடுதல் கால அவகாசத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற டொனால்ட் டிரம்ப் கட்சியின் கோரிக்கையை அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. பென்சில்வேனியாவில் பொதுத்தேர்தல் முடிந்து 3 நாட்களும், வடக்கு கரோலினாவில் 9 நாட்களும் தபால் வாக்குகளை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் சூறாவளி பிரட்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவால் இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்க தேர்தல் வரலாற்றில் அந்த நாட்டு மக்கள் பல மைல்கல்களை முறியடித்து புதிய வரலாறு படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : election ,US ,foundation , US presidential election, voting people, 7 crore votes, century record
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...