தமிழகத்தில் உள்ள கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் சித்த மருந்தகங்களை அமைக்க உத்தரவிடக்கோரும் வழக்கில் நீதிபதிகள் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளனர். தமிழக கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க வேண்டும் என்று மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஜெயவெங்கடேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில் கோயில்களில் வைத்திய சாலைகளை சோழமன்னர்கள் ஏற்படுத்தியிருப்பதாக தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.மேலும், திருப்பதி கோயிலில் சித்த மருத்துவமனைகளுடன், மருத்துவக் கல்லூரியும் உள்ளதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தமிழக கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேசமயம் இந்து சமய அறநிலையத்துறை இயக்குநர், சுகாதாரத்துறை செயலர் இது தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் 6 கோயில்களில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயவெங்கடேஷன் தொடர்ந்த வழக்கை நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories:

>