மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அச்சடித்த போலீஸ்காரர்

மதுரை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் போலீஸ்காரர் ஒருவர் போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளார். அதில், ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகு பார்த்த, சோழநாட்டுப் பேரரசி சின்னம்மா சசிகலா அவர்களே, 2021ம் ஆண்டில் தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழினம் காக்க  தமிழ்நாட்டு மக்களை காக்க ஆணையிடு! ஒற்றர் படை போர் படை தற்கொலை படை தயார் நிலையில் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சுவரொட்டியின் கீழே காவல்துறை தன்மான போராளி மா. ஒச்சாத்தேவர், பி.பில்பாண்டி, தளபதி,  அரசு போக்குவரத்து கழகம் என்று குறிப்பிட்டு இருவரது புகைப்படங்களும் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>