கூடுதல் தளர்வு தேவை: என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அறிக்கை: கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு, தீபாவளியை கொண்டாடும் நிலையில் உள்ளனர். இதையடுத்து பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள்,  மளிகைப்பொருட்கள், காய்கறி மற்றும் பழ வகைகள், பட்டாசுகள் வாங்குவதற்கு வசதியாக, தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் முழு நேரமும் திறந்து வியாபாரம் செய்வதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

அரசு அறிவிப்புபடி  சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படும். தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பதுதான் முக்கிய நிகழ்வு. பட்டாசு கடைகளுக்கான தடைகளையும், நடைமுறை விதிகளையும் தளர்வு செய்து, அதிகளவில் உற்பத்தி மற்றும் விற்பனையை கையாள  அரசு முன்வர வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி ேகட்டுக்கொள்கிறேன்.

Related Stories:

>