அரசியல் சாசன பிரிவு 44-ஐ நீக்க வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் தீர்மானம்

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நேற்று பொன்னேரியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் செய்யது இப்ராகிம், பொன்னேரி நகர தலைவர் நசீர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் மீஞ்சூர் சிக்கந்தர் பாஷா வரவேற்றார் மாவட்ட துணைத்தலைவர் பதூர்ஜமான் பொதுக்குழுவை துவக்கி வைத்து பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர்கள் நிஜாமுதீன், ஜபுருல்லாஹ், திருவள்ளூர்-நெல்லூர் அனைத்து முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சீனிஆதிம்கனி, மாணவரணி மாநில தலைவர் பழவை அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இக்கூட்டத்தில், இந்திய அரசியல் சாசனம் வகுத்துள்ள குடிமக்களின் கலாசார மத, மொழி மற்றும் இன தனித்தன்மைகளை பாதுகாப்பதே உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் மத சிறுபான்மையினரை மிரட்டுவதற்காக சில சுயநல சக்திகளால் பயன்படுத்தப்படும் அரசியல் சாசன பிரிவு 44-ஐ நீக்க வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், புதிய நிர்வாகிகளாக மாவட்ட மாணவரணி தலைவர் ஆருண் பாஷா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் எஸ்எம்ஏ.மஹபூப், இளைஞரணி செயலாளர் டி.எம்.மீராஷா. மகளிரணி செயலாளர் எம்.தேகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், நிர்வாகிகள் உள்பட பலர்  பங்கேற்றனர்.

Related Stories: