×

அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன்?.. யுஜிசி-க்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: அரியர் தேர்வு வழக்கில் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக  கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு ஐகோர்ட்டில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அகில இந்திய தொழிநுட்ப கல்வி கவுன்சில் ஒரு பதில்மனுவை தாக்கல் செய்தது.

அந்த பதில் மனுவில் தமிழக அரசின் இந்த உத்தரவு விதிகளுக்கு முரணானது என தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதிகள்  இந்திய தொழிநுட்ப கல்வி கவுன்சிலின் விதிகளுக்கு எதிராக எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வியை முன்வைத்தது. அதுமல்லாமல் பல்கலைக்கழக மானியக்குழுவும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு நீதிமன்றத்தில் பதிலளித்தது. அதில்; உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும் என்றும், எதையும் தள்ளிவைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாநில அரசுகள் சம்மந்தப்பட்ட தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் அதுமட்டுமல்லாமல் நடத்தவில்லை என்றால் நடத்துவதற்கான கால அவகாசத்தை கேட்டுப்பெறலாம் என்றும் தெரிவித்திருந்தது. அதாவது தமிழகத்தில் அரியர் தேர்வு ரத்து செய்தது செல்லாது என்ற ரீதியில் அந்த பதில்மனுவில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், கேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் யுஜிசி தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசின் உத்தரவை குறிப்பிட்டு ஏன் அதை தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள்; அதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு யுஜிசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; தமிழக அரசு இந்த அரியர் தேர்வை ரத்து செய்ததில் பல்கலைக்கழக மானியக்குழுவிக்கு எந்தஒரு உடன்பாடும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து நீதிபதிகள்; தமிழக அரசு இருந்து தேர்வை மட்டும் ஆன்லைனில் நடத்தும் போது ஏன் அரியர் தேர்வையும் ஆன்லைனில் நடத்த கூடாது? என்ற கேள்வியை முன்வைத்தனர். ஆனால் தமிழக அரசு சார்பில் இது தொடர்பாக உயர்க்கல்வித்துறை விரிவான பதில்மனுவை தாக்கல் செய்ய இருப்பதால் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை என்பது அடுத்த ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Government of Tamil Nadu ,examination ,Aryan , Why no reply was filed citing the order issued by the Government of Tamil Nadu canceling the Aryan examination? .. IGC condemns UGC
× RELATED தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையால்...