×

துபாயில் இன்று சென்னையுடன் மோதல்: கட்டாய வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா

துபாய்: ஐபிஎல் தொடரில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 12 போட்டியில் 4 வெற்றி, 8 தோல்வி என பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட  சென்னை எந்தவித நெருக்கடியும் இன்றி களம் காண்கிறது. அடுத்த சீசனுக்கு தயாராகும் வகையில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மறுபுறம் கொல்கத்தா 12 போட்டியில்  6 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. இன்று வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க முயலும். இதனால் கட்டாய வெற்றி நெருக்கடியில் உள்ளது. தினேஷ் கார்த்திக் பார்ம் இழந்து தடுமாறுகிறார்.

மற்ற வீரர்களும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரு அணிகளும் 21 போட்டிகளில் இதுவரை மோதி உள்ளன. இதில் 13ல் சென்னை, 8ல் கொல்கத்தா வென்றுள்ளன. நடப்பு சீசனில் அக்.7ம் தேதி மோதிய போட்டியில் 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வென்றது. அதற்கு பழிதீர்த்து ஆறுதல் தேட சென்னை முயற்சிக்கும்.Tags : Conflict ,Chennai ,victory ,Kolkata ,Dubai ,crisis , Clash with Chennai today in Dubai: Kolkata in crisis of forced victory
× RELATED நாடு முழுவதும் வீரர்களுக்கு அஞ்சலி:கார்கில் வெற்றி தினம்