×

அணியின் சிறப்பான செயல்பாட்டால் மகிழ்ச்சி: பொல்லார்ட் பேட்டி

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று இரவு நடந்த 48வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் தேவ்தத் பட்டிக்கல் 74 (45 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜோஷ் பிலிப் 33, கோஹ்லி 9, டிவில்லியர்ஸ் 15, துபே 2, மோரீஸ் 4, குர்கீரத்சிங் 10, வாஷிங்டன் சுந்தர் 10 ரன் எடுத்தனர். மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 165 ரன் இலக்கை துரத்திய மும்பை 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் நாட் அவுட்டாக  43 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 79 ரன் விளாசினார். டிகாக் 18, இஷான் கிஷன் 25 ரன் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் சிராஜ், சாஹல் தலா 2 விக்கெட் எடுத்தனர். சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 10வது போட்டியில், 8வது வெற்றியை பெற்ற மும்பை முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பெங்களூரு 5வது தோல்வியை சந்தித்தது. வெற்றிக்கு பின் மும்பை கேப்டன் பொல்லார்ட் அளித்த பேட்டி: நான் ஒரு விதத்தில் மேட்ச் அப்களில் பெரியவன். நான் பகுப்பாய்வு செய்ய முயற்சிக்கிறேன்.

எனக்கு ஏபிடியின் விக்கெட் கிடைத்தது. நாம் பும்ராவை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. மற்றவர்கள் முன்னேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் விக்கெட்டுகளை இழந்தாலும் சூர்யகுமார் யாதவ் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இக்கட்டான நேரத்தில் யாராவது ஒருவர் ஸ்ட்ரைக் எடுத்து ஆடுகின்றனர். அவரால் தொடர்ந்து இதுபோல் ஆட முடியும். இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காதது ஏமாற்றம் தான். தொடர்ந்து ரன் குவித்தால் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். நான் என்ன செய்யவேண்டும் என அணி விரும்புகிறதோ அதை நான் எப்போதும் செய்திருக்கிறேன். அணியின் சிறப்பான செயல்பட்டால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்றார்.

பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், கடைசி 5 ஓவரில் நாங்கள் அடித்த பந்துகள்  எல்லாம் பீல்டர்களிடம் சென்றது. இதுபோன்ற விஷயங்கள் நடப்பது இயல்பு. கடைசி 5 ஓவரில் மும்பை அணியினர் சிறப்பாக பந்து வீசி 20 ரன்கள் வரை கட்டுப்படுத்தினர். நாங்கள் பந்து வீச்சின் போது 17வது ஓவர் வரை ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். இது பவுலர்களின் கன்னியமான முயற்சி, என்றார்.

வெற்றிபெற வைத்ததில் மகிழ்ச்சி
ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடிப்பது தான் என் விருப்பம். இன்று அதை செய்தது மகிழ்ச்சி. 3வது வரிசையில் ஆடவே விரும்புகிறேன். போட்டியை தொடங்குவதற்கு முன் அணி நிர்வாகமும் ரோஹித்தும் என்னிடம் நீங்கள் விளையாட்டை ஆழமாக எடுத்துச் செல்ல போதுமான அளவு விளையாடியுள்ளீர்கள் என்றனர். என்னால் அதைச் செய்ய முடிந்தது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.

Tags : team ,interview ,Pollard , Glad the team performed well: Pollard interview
× RELATED பாண்டியா பாவம்…தேற்றுகிறார் போலார்டு