மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை பலி

மஞ்சூர்: மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தை இறந்து கிடந்தது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது மெரிலேன்ட். 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியை சுற்றிலும் அடர் காடு சூழ்ந்துள்ளது. நேற்று காலை அப்பகுதியில் குடியிருப்புகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. தேயிலை தோட்டத்திற்கு இலை பறிக்க சென்ற தொழிலாளர்கள் இதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் தலைமையில் குந்தா ரேஞ்சர் சரவணன், வனவர் ரவிக்குமார், வனக்காப்பாளர் செல்வகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் உடலை மீட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் சிறுத்தையின் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டதுடன் இடுப்பு பகுதியில் தோல் உறிந்து காணப்பட்டதால் மற்றொரு சிறுத்தை அல்லது  காட்டு பன்றியுடன் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்திருக்கக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

>