தமிழகம் மீட்போம்: 2021-சட்டமன்ற தேர்தலுக்கான பொதுக்கூட்டங்களை அறிவித்தது திமுக: காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெறும் திமுகவின் முதல்கட்ட சட்டமன்ற தேர்தல் பொதுக்கூட்ட விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இது திராவிட முன்னேற்ற கழகம் தலைமை வெளியிட்ட அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் மும்பெரும் விழாக்களில்

காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொண்டதைத் தொடர்ந்து, தமிழகம் மீட்போம் எனும் தலைப்பிலான 2021-சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும். முதல் கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட தி.மு.கழக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள் நடைபெறும் தேதி,இடம்:

நவம்பர் 1-ம் தேதி  ஈரோடு,

நவம்பர் 2-ம் தேதி  புதுக்கோட்டை

நவம்பர் 3-ம் தேதி  விருதுநகர்.

நவம்பர் 5-ம் தேதி  தூத்துக்குடி.

நவம்பர் 7-ம் தேதி  வேலூர்.

நவம்பர் 8-ம் தேதி  நீலகரி.

நவம்பர் 9-ம் தேதி  மதுரை.

நவம்பர் 10-ம் தேதி விழுப்புரம்.

Related Stories:

>