இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அரண்மனையில் துப்புரவுப் பணியாளர்கள் வேலை.. ஆரம்பச் சம்பளமே ரூ 18.5 லட்சமாம்..வசிக்க தனி பங்களாவும் உண்டு

லண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழும் ‘வின்ஸ்டர் காஸ்ட்டில்’ என்ற மிகப் பிரமாண்டாமான த அரண்மனையில் துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். இதில் தேர்வாகும் பணியாளர்களுக்கு ஆரம்பச் சம்பளமே ரூ 18.5 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர்ந்தவர்கள் அரண்மனையின் அருகிலேயே வசிக்க தனி பங்களாவும் உண்டு. ஆண்டுக்கு 33 நாட்கள் விடுமுறை, ஓய்வூதியம், உணவுப்படி, போக்குவரத்து செலவு போன்ற அனைத்தும் வழங்கப்படுகிறது.

மேலும், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம் ஆகிய வசதிகளை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி நாள் ஆகும்.இதில் சேர விரும்பும் பணியாளர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதம் தெரிந்திருக்க வேண்டும். ஊழியர்களுக்கு முதல் கட்டமாக 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.பிறகு அவர்கள் முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள். இது நிரந்தரப் பணியாகும்.

Related Stories:

>