×

'அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் சாபக்கேடு': தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் சாடல்..!!

சென்னை: அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் சாபக்கேடாக இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். விவசாய விரோத 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசுக்கு கும்பிடு போட்டு ஆதரவு தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி என அவர் சாடியுள்ளார். பஞ்சாபில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ் நெல் வாங்க தடை போட்டு சட்டம் நிறைவேற்றியிருக்கிறார்கள். பஞ்சாப் மாநில முதல்வருக்கு உள்ள தைரியம் திரு.பழனிசாமிக்கு இல்லை. கொஞ்சம்கூட மனசாட்சியே இன்றி வேளாண் சட்டங்களுக்கு ஓட்டுப்போட்டு மாட்டுவண்டி ஓட்டி ஏமாற்றுகிறார் முதல்வர் எனவும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Tags : DMK ,Tamil Nadu ,Stalin , ADMK rule, curse in Tamil Nadu, M.K. Stalin
× RELATED செலினுக்கு திமுக தலைவர் வாழ்த்து