×

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோச பூஜை: சென்னை திருநங்கைகள் வழிபாடு

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே வத்திராயிருப்பில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோசத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று பிரதோசத்தையொட்டி தாணிப்பாறை வனத்துறை கேட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் காலை 6:30 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தினர்.சென்னையிலிருந்து வாகனத்தில் 16 திருநங்கைகள் சுந்தரமகாலிங்க சாமியை தரிசிக்க வந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வெள்ளியங்கிரி உள்ளிட்ட கோயிலுக்கு சென்று வந்தோம். சுந்தரமகாலிங்கம் சாமியை தரிசிக்க வேண்டும் என்பதால் சதுரகிரி வந்துள்ளோம்’’ என்றனர். பிரதோசத்தையொட்டி மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்கு சுந்தரமகாலிங்க சாமிக்கு பால்,பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  சுந்தரமகாலிங்கம் கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா(எ) பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஏற்பாடுகளை ெசய்திருந்தனர்.

Tags : Pradosa Puja ,Sathuragiri Sundaramakalingam Temple ,Chennai , Sathuragiri, Sundaramakalingam Temple, Transgender, Worship
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...