நந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற ஐ.டி சோதனையில் ரூ.150 கோடி சொத்து ஆவணங்கள்; ரூ.5 கோடி பணம் பறிமுதல்; முறைகேடுகள் கண்டுபிடிப்பு.!!!

ஈரோடு: ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட நந்தா கல்வி குழுமத்தின் கீழ், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி உள்பட பல கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதற்கிடையே, வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கல்வி குழுமத்தில் நடப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நந்தா கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நந்தா கல்வி குழுமத்திற்கு சொந்தமான 22 இடங்களில் நேற்று சுமார் 12 மணி அளவில் 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர். இந்நிலையில், நந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.150 கோடி சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், ரூ.5 கோடி ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்துள்ளது. மாணவர்களிடம் அதிக தொகை வசூலித்துவிட்டு, குறைவான தொகைக்கு கணக்கு காட்டியதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: