×

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிதி ஒதுக்கவிட்டால் மத்திய, மாநில அரசு செயலர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரத்தை அழகுபடுத்த நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு 4 வாரகாலம் இறுதி அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Mamallapuram ,iCourt , Mamallapuram, Beauty, Finance, Icord
× RELATED கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை வாங்க...