கட்டாய கல்வி சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.934 கோடி நிதியுதவி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

சென்னை: கட்டாய கல்வி சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.934 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று திருச்செங்கோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் அவதிப்பட்டு வரும் இந்த தருணத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் செப்டம்பர் 1ம்  தேதி வரை, சுமார் 29 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகளில் சேர்வதற்காக விண்ணப்பம் செய்தனர்.தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நுழைவு வகுப்பில் 25 விழுக்காடு மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள்  தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 25ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்ற வசதிகள் செய்யப்பட்டு முடிவடைந்தது.

இதனையடுத்து, தற்போது திருச்செங்கோட்டில் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: கட்டாய கல்வி சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.934 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது மேலும், ரூ.375 கோடி நிலுவையை விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: