கடந்த 2 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,907-க்கு விற்பனை.!!!

சென்னை: கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. மாதத்தின் முதல் நாள்(1ம் தேதி) தங்கம் விலை சவரனுக்கு 48 அதிகரித்து ஒரு சவரன் 38,520க்கும் விற்க்கப்பட்டது. தொடர்ந்து, அடுத்த நாள் 2-ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது.

இருப்பினும், கடந்த 17-ம் தேதி சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.183 குறைந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,520-க்கும், 20-ம் தேதி ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. 21-ம் தேதி சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640க்கும், 22-ம் தேதி ரூ.24 உயர்ந்து ரூ.37,760-க்கும், ரூ.32 உயர்ந்துள்ளது. 23-ம் தேதி சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.37,792க்கும், 24-ம் தேதி ரூ.192 குறைந்து ரூ.37,600க்கும், 26-ம் தேதி சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,704க்கும், 27-ம் தேதி ரூ.512 உயர்ந்து ரூ.38,296-க்கும், நேற்று 28-ம் தேதி சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38,184-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் 22 ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,907-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.30 குறைந்து  ரூ.4,738 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 குறைந்து ரூ.64.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் அதிகளவில் விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் விலை குறைந்தும், உயர்ந்தும் வருவது நகை வாங்க பணம் சேர்த்து வைத்திருப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தங்கம் சவரன் ரூ.37,907 ஆக குறைந்துள்ளது நகை பிரியர்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: