×

அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: யு.ஜி.சி மீண்டும் திட்டவட்டம்

சென்னை: அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என யு.ஜி.சி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை வைக்கலாம் எனவும்  யு.ஜி.சி தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக கலை - அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் தேர்வை தமிழக அரசு ரத்து செய்திருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.


Tags : State govt ,Aryan ,UGC , Aryan, repeal, state government, no authority, UGC
× RELATED ஈரோட்டில் இன்று மின் நிறுத்தம்