×

அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி வீழ்ச்சியடைந்துள்ளதற்கு ஏசர் அறிக்கையே சான்று: எம்.பி ரவிக்குமார் டுவிட்

சென்னை: அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளதற்கு பள்ளிக்கல்வி குறித்த ஏசர்(ASER) அறிக்கையே சான்று என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பள்ளி கல்வி வீழ்ச்சி குறித்து எம்.பி ரவிக்குமார் தனது டுவிட்டரில் பதிவில், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியின் வீழ்ச்சி. பள்ளிக்கல்வி குறித்த ஏசர் ( ASER) அறிக்கையில் தமிழ்நாட்டில் 6 -10 வயதிலுள்ள குழந்தைகளில் பள்ளிக்குச் செல்லாதவர்களின் சதவீதம் தேசிய அளவைவிட அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது. அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி வீழ்ச்சியடைந்துள்ளதற்கு சான்று இது என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Ravikumar Dwight ,Acer ,AIADMK , Acer report proves AIADMK's decline in schooling: MP Ravikumar Dwight
× RELATED குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 4 நாளில்...